• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Store

அன்பியமாகி ஒளிர

H21cm x W14cm

Review

அன்பே இறைவன். அன்பினில் பிறந்த இறைக்குலம் நாம், அன்பு வழி இயேசுவின் தனி வழி. அவரைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் அன்பு மயமாக வேண்டும். அன்பை வாழ்வாக்கிடவும், அன்புச் சமூகங்களாக இவ்வுலகில் சான்றுபகரவும், நமக்கு அருமையான வாய்ப்பை திருச்சபை அன்பியங்களின் வழியாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மனித நேய மதிப்பீடுகளை நிலைநிறுத்தவும், இறையாட்சியின் விழுமியங்களை அன்றாட வாழ்வாக்கி, இறைவன் விரும்பும் புதிய சமுதாயத்தை அன்பின் அடிப்படையில் அமைக்கவும் அன்பியத்தின் வழியாக இறைமக்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். புதியமுறையில் திருச்சபையாக மலர்ந்திருக்கும் அன்பியங்களைப் பற்றியும் அவற்றைப் பலப்படுத்தி விசுவாசத் தலமாக மாற்றி உயிரோட்டமுள்ள இறைச்சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவியாக உங்களுக்காக படைக்கப்பட்டுள்ள நூல் "அன்பியமாக ஒளிர". உலகிற்கு உப்பாகவும், ஓளியாகவும் வாழ அன்பியங்கள் காட்டும் வழிமுறைகளை நடைமுறையாக்க இந்நூல் அழைப்பு விடுக்கிறது.

 


Share: