H21.5cm x W14cm
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் முடிந்த 50 ஆம் ஆண்டு நிறைவினை 2012-ல் திருஅவை (திருச்சபை) 'நம்பிக்கை ஆண்டு' என அறிவித்து இறைமக்களிடையே புத்தெழுச்சியைகொணர விழைந்திருக்கிறது. இன்றைய உலகில், திருஅவையின் வாழ்விலும், பணியிலும் மாபெரும் திருப்புமுனையாக, புதியதொரு பெந்தக்கோஸ்து அனுபவமாகத் திருச்சங்கம் அமைந்துள்ளது. தூய ஆவியின் வழி நடத்துதலால் பழைய போக்கிலிருந்து புதியதொரு பாதையில், முன் நோக்கியப் பார்வையில், மாற்று சிந்தனையோடு திருச்சபையிலும், சமூகத்திலும் இறையாட்சியின் மதிப்பீடுகளை ஆழமாக நிலைநிறுத்துகின்ற செயல்தான் திருச்சங்கத்தில் நடந்தேறியுள்ளது. திருச்சங்கத்தின் தாக்கங்களும் மாற்றங்களும் இன்னும் தெளிவாகப் புரிந்துக் கொள்ளப்பட வேண்டும். இவை அர்த்தமுள்ள செயலாக்கம் பெறவேண்டுமென்ற ஆவல் திருஅவையில் இன்னமும் உள்ளது. திருச்சங்கத்தின் ஏடுகளை எல்லாரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கேள்வி-பதில் வடிவத்தில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அருட்பணி. பெல்லார்மின் ச.ச. (இல்லதந்தை)
Share: