H29cm x W23cm (தனிச்சுற்றுக்காக மட்டும்)
ஆழமான இறைநம்பிக்கை, எளிமையான வாழ்வு, தன்னலமற்ற பிறர்நல சேவை, ஆகியவற்றால் சலேசிய தோட்டத்தை அணிசெய்யும், இந்நூலில் காணும் புனிதர்களின் வாழ்வும், பரிந்துரையும் நமக்கு கிடைத்த பெரும் பேறு. இப்புனிதர்களின் சிறப்புத் திருப்பலி புத்தகத்தின் இரண்டாம் பதிப்பினை உரோமைத் திருப்பலி புத்தகத்தின் மூன்றாம் மாதிரிப் படிவத்திற்கு ஒத்தது போல் அமைந்துள்ளது. திருவழிபாடின்றி திருஅவைக்கு உயிரில்லை. திருவழிபாட்டில் முதன்மையானது நற்கருணை என்னும் உன்னதமான மாண்புமிக்க அருளடையாளமாகும். இது ஆண்டவரின் இறப்பு மற்றும் உயிர்ப்பை நினைவுகூர்ந்து கொண்டாடும் தியாகப்பலியாகும்.இத்தகைய திருவழிபாட்டினை அர்த்தமுள்ள பொருளுள்ள விதத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் அகமும், புறமும் சேர்ந்து கொண்டாடவேண்டுமென்று திருஅவை விரும்புகின்றது. நாமும் நற்கருணை கொண்டாட்டத்தை பொருளுள்ள விதத்தில் பங்குகொண்டு, நம்பிக்கை வாழ்வில் வேரூன்றி, புனிதத்தில் வளர பெரிதும் உதவுவதாக. (அருட்பணி. பார்த்திபன்ராஜ் சூசை, ச.ச. தீபகம் இயக்குநர்)
Share: