H14.5cm x W10.5cm
நம் கத்தோலிக்க திருஅவை நமது வாழ்வானது கிறிஸ்துவை மையமாக கொண்டு அமைய வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. கிறிஸ்துவை மையமாகக் கொள்ள வேண்டுமென்றால் அவரில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவரில் நம்பிக்கைக் கொள்ள அவரின் முழுமையான பிரசன்னமாகிய திருவுடலையும், திருரத்தத்தையும் பெற வேண்டும். முதன்முதலாக நற்கருணையாகிய ஆண்டவரின் உடலையும், இரத்தத்தையும் பெற தயாரிக்கும் பிள்ளைகள், நம் கத்தோலிக்க திருஅவையின் படிப்பினைகளை தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்நூல் திருத்தந்தையின் அறிவுறுத்தலின்படி வெளிவந்த கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி நூலை அடிப்டையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
Share: