H16.5cm x W10.5cm
உலகிலே பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் நிறைவான, மகிழ்வான, நிம்மதியான வாழ்வை அடைய நினைக்கிறான். அந்தக் கனவை நனவாக்க, மனிதன் தன் வாழ்வில் உயர, மேன்மை அடைய பல வழிகளைத் தேடுகின்றான். சிந்தனையில் வளர, 'அறிவியல்' பாதையைத் தேடுகிறான். 'உடலியலில்' வளர மருத்துவ வழியை தேடுகிறான். வாழ்வில் உயர 'பொருளியல்' பாதையைத் தேடுகின்றான். அதே போல் அவன் ஆன்மிக வாழ்வில் வளர இறை வழியை தேட வேண்டும். கிறிஸ்துவர்களாகிய நாம் நாட வேண்டிய வழி, தேடவேண்டிய பாதை 'சிலுவை பாதை'. காரணம்: சிலுவை பாதை இழந்து போன இறைமனித உறவை புதுப்பிக்கும் பாதை. சிலுவைப் பாதை இறையன்பின் வெளிப்பாட்டுப் பாதை.
Share: