H18cm x W12cm
திருவருகைக் காலம் இரண்டு பண்புகளை கொண்டது. ஒன்று இயேசு இவ்வுலகில் முதல் முறையாக வந்த நிகழ்வைக் கொண்டாட மக்களை தயாரிக்கிறது. இரண்டாவது வரவிருக்கும் இயேசுவின் இரண்டாம் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்க்க மக்களை தூண்டுகிறது. இவ்வாறு திருவருகைக் காலம் எதிர்பார்ப்புடன் கூடிய மகிழ்ச்சியின் காலமாக விளங்குகிறது. இது நான்கு வாரங்களை உள்ளடக்கி உள்ளது. இந்த நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வளையத்தினுள் நான்கு நிறம் கொண்ட மெழுகுவர்த்தியை ஏற்றலாம்.
Share: