H24cm x W18cm
வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் இறைவனுடைய பிரசன்னத்தை உணர, நமக்கும் பிறருக்கும் இறைவனின் திருத்திட்டத்தை உய்த்துணர, உள்ளத்திலே இறையுணர்வை வளர்த்து, புதியதோர் சமுதாயத்தை உருவாக்கவே மறைக்கல்வி. தந்தை அமலோர் பாணியிலே, மறைக்கல்வி தனிமனித விசுவாச வளர்ச்சி மட்டுமன்று... இறை இயேசுவின் மதிப்பீடுகளை மையமாக வைத்து மலருகின்ற சமூகத்தைக் கட்டி எழுப்புவது... உறவுகளை கொச்சைப்படுத்தி, மனிதரை பயன்படுத்தி பொருட்களை அன்பு செய்யும் சமூகத்தில் மனிதத்தை நிலைப்படுத்துவது. இறைவார்த்தையை மையப்படுத்தி, அதை வாழும் சூழலோடு இணைத்து, அவ்வார்த்தையின் ஒளியில் நம் வாழ்வை ஆழப்படுத்தி, புதிய சமுதாயத்தை உருவாக்கவே இந்த மறைக்கல்வி நூல். (பணி. ஜெயபாலன், ச.ச. இயக்குனர், தீபகம்)
Share: