• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Store

நல்லதொரு குடும்பம்: திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன்கிழமை மறைக்கல்வி

H20.5cm x W14.5cm

Review

குடும்பம் ஒரு மனிதனின் இதயத்துடிப்பு. குடும்பம் ஒரு சமுதாயத்தின் முக்கிய உயிரணு. குடும்பத்திலிருந்தே நாம் சமூகத்தில் வாழ கற்றுக்கொள்கிறோம். நம்பிக்கையின் முதல் சத்தும் குடும்பத்திலிருந்துதான் வருகிறது. சமுதாயத்தில் வாழ்வதற்கு தேவையான அடிப்படை நற்பண்புகளைக் கற்பிப்பவர்கள் நமது தாத்தா பாட்டிகளும், பெற்றோர்களுமே. நம்பிக்கையின் முதல் ஆசிரியர்களும் இவர்களே. கடவுளின் உண்மையான அனுபவத்திற்கு இவர்கள் தான் கதவை திருக்கிறார்கள். குடும்பம் என்பது ஆயுள் முழுவதும் நீடித்திருக்கின்ற அன்பு மற்றும் வாழ்வளிக்கும் நிரந்தரமான தொட்டிலாக திகழ்கின்றது. ஒரு குடும்பம் எதிர்கொள்ளக் கூடிய, பலவீனமான சூழல்களை மனித அறிவாற்றலும், கிறிஸ்துவ நம்பிக்கையும் ஒருசேர அமைந்துள்ள கண்ணோட்டத்தில் அணுகப்படவேண்டும். தாய் திருஅவை அத்தகையோர்கள் மீது இரக்கத்துடனும் கவனிப்புடனும் இருக்கவேண்டும். ஒரு சாதாரண குடும்பத்தை வேலை, மகிழ்ச்சி, ஓய்வு மற்றும் கொண்டாட்டங்களினால் நிரப்பவேண்டும். ஒரு குடும்பமானது தனக்குள்ளும், வெளியிலும் நம்பிக்கையை எடுத்துரைக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.

 


Share: