H21cm x W15cm
"புனிதம்" திடீர் என்று முளைக்கும் காளானை போன்றதல்ல; அது பொறுமையாக படிப்படியாகச் செதுக்கி உருவாக்கப்படும் ஒரு சிலையைப் போன்றது! பழிச்சொற்களை ஏற்றுக்கொள்ளும் பொறுமை வேண்டும்! வித்தியாசமாக வாழ்வதற்கு உள்ளத்தில் உறுதி வேண்டும்! மற்றவர்களது மகிழ்ச்சிக்காக வாழும் தியாகம் வேண்டும்! இறைவன் மேல், அவரது மகன் இயேசுவின் மேல், தூய ஆவியின் ஆற்றலின் மேல் அளப்பரிய அன்பும் விசுவாசமும் வேண்டும்! நற்செய்தியின் ஒளியில் பார்த்தால் "பேறுபெற்றவர்கள்" இவர்கள்! புனிதர்கள் இவர்கள் என்று இவர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை! அதற்காக அவர்கள் வாழவில்லை! அதுதான் எதார்த்தம். மார்ச் 19, 2019-ல் வெளியிடப்பட்ட திருத்தந்தையின் "Gaudete et Exultate" -" மகிழ்ச்சியாயிரு - ஆர்ப்பரித்து சந்தோசமாயிரு" என்ற தூதுமடல், " நாம் ஒவ்வொருவரும் புனிதத்திற்காக அழைக்கப்பட்டிருக்கின்றோம்" என்று கூறுவதோடு புனிதத்தைப்பற்றிய வித்தியாசமான ஒரு கருத்தை முன்வைக்கிறது. இதே கருத்தை முன்வைப்பதுபோல் உள்ளது இந்நூல். (ஸ்தனிஸ்லாஸ் சுவாமிக்கண்ணு ச.ச., எருசலேம்)
Share: